Friday, October 2, 2015

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிரான மனு பிற்போடப்பட்டது!

Friday, October 02, 2015
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தடைசெய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிற்போட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பிரதமரின் உத்தரவுப்படி இயங்கும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ள நிறுவனம் எனத் தெரிவித்து எல்லே குணவன்ச தேரர் மற்றும் கலாநிதி காலோ பொன்சேகா ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாயின் இன்று தெரிவிக்க முடியும் என்று மனுவின் பிரதிவாதிகளான பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்பில் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டதரணி குறிப்பிட்டார்.

இந்நிலையில் மீண்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு எதிர்வரும் 06ம் திகதி வரை காலஅவகாசம் வழங்குவதாக நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment