Sunday, October 25, 2015

சிரியா விஷயம் ரொம்ப 'சீரியஸ்': அமெரிக்கா, ரஷ்யா, சீனா பலப்பரீட்சை!!

Sunday, October 25, 2015
நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் போதே, மூன்றாவது உலகப் போர் வெடிக்கலாம். அந்தஅளவுக்கு சிரியாவில் நிலைமை பயங்கரமாக உள்ளது. இங்கு நடக்கும்உள்நாட்டு சண்டை, சர்வதேச அளவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் வான் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா போர் விமானங்கள் ஒருவேளை நேருக்கு நேர் மோதிக் கொண்டால், அதுவே மூன்றாம் உலகப்போருக்குவித்திடும். சின்ன சிரியாவால் இவ்வளவு பெரிய ஆபத்தா... அப்படி என்ன தான்சிரியாவில் நடக்கிறது என பார்ப்போம்.

கடந்த 1961 வரை எகிப்தின் ஒரு பகுதியாகவே சிரியா இருந்தது. 1961 செப்.28ல் தனிநாடாக மலர்ந்தது. இங்கு ஒரு கட்சி, ஒரு ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. 1970 முதல் 'பாத்' எனும் கட்சி ஆட்சி செய்கிறது. 1970 முதல் 2000 வரை ஹபிஸ் அல் ஆசாத் என்பவர் ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடக்கிறது. இவரது மகன் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு வந்ததும், ஜனநாயகத்துக்காக போராடிய குழுக்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து ஜனநாயகத்தை விரும்பிய சில போராட்ட குழுக்கள் புரட்சியில் குதித்தன.தவிர, சிரியாவில் ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப் போர் நடக்கிறது. இங்கு சிறுபான்மையாக உள்ள ஷியா பிரிவை சேர்ந்த பஷார் அல்- ஆசாத் அதிபராக இருப்பது, பெரும்பான்மையாக உள்ள சன்னிபிரிவுக்கு பிடிக்கவில்லை. சன்னி பிரிவுக்குஆதரவாக ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் போரில்குதித்தன. இதன் விளைவாக 2011ல்சிரியாவில் உள்நாட்டு போர் துவங்கியது.இதில், அதிபர் ஆசாத்தை,அமெரிக்கா நேரடியாக எதிர்க்கிறது. மறுபக்கம் அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்யா உள்ளது. இவரது ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால், சிரியா முழுவதும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என அஞ்சுகிறது.

இதற்கிடையே ஈராக் மற்றும்சிரியாவின் சில பகுதிகளை பிடித்து ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு மீது அமெரிக்க ஆதரவு கூட்டு படைகளும், ரஷ்யா ஆதரவு படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு எதிரான விமான தாக்குதலை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன. ரஷ்யா ஐ.எஸ்.ஐ.எஸ்., முகாம்களை மட்டுமல்லாமல், அமெரிக்காஆதரவு கிளர்ச்சி படைகளையும் தாக்குகிறது. இது அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.கிளர்ச்சிப்படைகளை காக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு உள்ளது. மேலும், வான்வழி தாக்குதலின் போது இருநாட்டு போர் விமானங்களும் அருகருகே பறக்கின்றன. இவை சற்று தடுமாறினால், 30 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். அவ்வாறு நடந்தால் அமெரிக்கா, ரஷ்யா இடையே நேரடியாக போர் ஏற்படும்.

தற்போது அமெரிக்காவுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சில நாடுகளும் சிரியா களத்தில் உள்ளன. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு பக்கம் சேரும் பட்சத்தில், உலக நாடுகளில் இரு பிரிவு ஏற்பட்டு, உலகப்போர் வெடிக்கும். இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது சிரியாவில் நடக்கும் உள்ளூர் போரில் லட்சக்கணக்கான மக்கள்கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது உலகப் போராக மாறினால், பேரழிவு ஏற்படும். இதனை தவிர்க்க, ஐ.நா., சபை மற்றும் உலக நாடுகள் சேர்ந்து சிரியா பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே சாமான்யமக்களின் பிரார்த்தனையாக உள்ளது.
 
கண் வைக்க காரணம்:
அமெரிக்காவை பொறுத்தவரை உலகின் எந்த நாட்டிலும் தங்களுக்கு சாதகமான அரசை அமைத்துக் கொள்ள விரும்பும். அந்த வகையில் தான் சிரியா புரட்சி படைகளுக்கு ஆயுதமும், பயிற்சியும் வழங்குகிறது.ரஷ்யா, சிரியா அரசுடன் 40 ஆண்டுகளாக நம்பிக்கையான நட்பு நாடாகஉள்ளது. சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தில் ரஷ்யாவின் கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தங்கள் நாட்டுக்கு வெளியே அமைத்துள்ள ஒரே கடற்படை தளம் இதுதான். இதன் காரணமாகத் தான் சிரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

3 லட்சம்:
இந்த போரால் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். இதில் 12,000 குழந்தைகளும் அடங்குவர்.

24 லட்சம்:
பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கை 24 லட்சம். 5 ஆயிரம் முதல் 14 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அழியும் பாரம்பரியம்:

சிரியா போரில் புராதனசின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுகின்றன.பல்மைராவில் உள்ள பாபிலோனிய கல்துாண்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வெடி வைத்து தகர்த்துள்ளனர்.

87:ஐ.நா., சபையால்அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளில், சிரியா பரப்பளவு (௧,௮௫,௧௮௦ ச.கி.மீ.,) அடிப்படையில் 87வது இடத்தில் இருக்கிறது.

76 லட்சம்:
சிரியா போரால் பாதிக்கப்பட்டு அனைத்து உடைமைகளையும் இழந்து, உள்நாட்டிலேயேஅகதிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 76 லட்சம் பேர். இதில் 50 சதவீதம் பேர்குழந்தைகள்.

20 லட்சம்:
உள்நாட்டில் அகதிகளாக மாறியவர்கள் தவிர, துருக்கி, லெபனான், ஈராக், எகிப்து, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 20 லட்சம் பேர் துருக்கியில் உள்ளனர்.
 
2011:சிரியா உள்நாட்டுப் போர் 2011ல் ஆரம்பித்தது. அப்போது அதன் மக்கள் தொகை 2.3 கோடி பேர். போரின் காரணமாக அதில் பாதி பேர் இன்றுஅகதிகளாக மாறிவிட்டனர்.மனித உரிமை மீறல்ரசாயன ஆயுதங்கள்பயன்பாடு, பாலியல் தொல்லை, குழந்தைகள் உள்ளிட்ட கைதிகளை துாக்கிலிடுவது உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள்அதிகமாக நடக்கிறது.

30: சுதந்திரத்துக்குப்பின் அதிபராக இருந்தவர்களில் ஹபிஸ் அல் ஆசாத் என்பவர் 1971 முதல் 2000 வரை 30 ஆண்டுகள் பதவியில் இருந்தார். தற்போது 2000 முதல் 15 ஆண்டுகளாக அவரது மகன் பஷார் அல் ஆசாத்பதவியில் இருக்கிறார்.

முதல் உலகப்போர்(1914-- 18):
1914 ஜூன் 28ல் ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாட்டை, காவ்ரிலோ பிரின்சிப் என்ற செர்பிய நாட்டை சேர்ந்தவன் சுட்டு கொன்றான். இதனால் செர்பியா மீது ஆஸ்திரியா போர் தொடுத்தது உலக போர் துவங்க உடனடிகாரணமாக அமைந்தது. ஆஸ்திரியாவுக்குஆதரவாக ஹங்கேரி, ஜெர்மனி, ஒட்டோமன்,பல்கேரியா ஆகிய நாடுகள் களமிறங்கின.இவர்களை எதிர்த்து நேச நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, செர்பியா, அமெரிக்கா,இத்தாலி மற்றும் பல நாடுகள் போரிட்டன. முதலாம் உலகப்போர் பெரும்பாலும் ஐரோப்பா கண்டத்தை மையப்படுத்தியே நடந்தது. போரில் இயந்திரத்துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீனஆயுதங்கள் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டன.தரைவழி மட்டுமல்லாமல், வான்வழியாகவும், நீர்மூழ்கி கப்பல் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதால் சேதம் அதிகமாக இருந்தது.போரில் சுமார் ஏழு கோடி வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் இரண்டு கோடி வீரர்களும், பொதுமக்களும் இறந்தனர். நேச நாடுகள் வெற்றியடைந்த போதிலும், இருதரப்பிலும் சேதம் அதிகமாக இருந்தது. போரினால் பொருளாதார ரீதியாகவும், நோய் தொற்றுகளாலும் மக்கள் பாதிப்படைந்தனர்.ஆஸ்திரியா, ஹங்கேரி, ரஷ்யா போன்ற ராஜ்ஜியங்கள் துண்டுகளாகின. உலக நாடுகள் மத்தியில் இதுபோன்ற மற்றொரு போர் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் பன்னாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவர போடப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாகஉருவான நாடுகளின் நிலையற்ற தன்மையும் 2ம் உலகப்போர் ஏற்பட காரணமாக அமைந்தன.

இரண்டாம் உலகப்போர்(1939- - 45):
ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் நாடு பிடிக்கும் ஆசையே இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக கூறப் படுகிறது. இவர் போலந்து மீது மேற்கொண்ட படை யெடுப்பே போரின் துவக்கமாக இருந்தது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் சில நாடுகள் இணைந்து பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றை எதிர்த்தன. ஹிட்லர் படைகள் ஐரோப்பாவின் பெரும்பகுதியை பிடித்து பிரிட்டன் அருகே வரை சென்றன.

ரஷ்யாவின் மீது ஜெர்மனியின் நாஜி படைகள் போர் தொடுத்தது. இதனால் ரஷ்யா நேசநாடுகள் பக்கம் சேர்ந்தது. மற்றொரு பக்கம் ஜப்பான், சீனாவின் பல பகுதிகளை கைப்பற்றி இந்தியாவின் கிழக்கு எல்லை வரை முன்னேறி விட்டது. 1942 வரை ஜெர்மனி, ஜப்பான் கைகளே ஓங்கி இருந்தன. ரஷ்யாவும், அமெரிக்காவும் போரில் இறங்கிய பின் தான் நேசநாடுகளின் வெற்றி உறுதியானது.1945 மே மாதத்தில் ஜெர்மனி தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைந்தது. ஆகஸ்ட் மாதம் ஹிரோசிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதால் ஜப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. உலகில் பல புதிய ஜனநாயகம் மலர்ந்தது. அமெரிக்காவும், ரஷ்யாவும் புதுவல்லரசு நாடுகளாக மாறின. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காக 1945ல் ஐக்கிய நாடுகள் சபைஏற்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment