Tuesday, September 15, 2015

தமிழர்கள் குறை தீர்க்க புதிய சட்டம் இயற்றப்படும்: மங்கள சமரவீர தகவல்!

Tuesday, September 15, 2015
ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை வெளியுறவு துறை மந்திரி மங்கள சமரவீர கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசியதாவது:–
 
இலங்கையில் வாழும் தமிழர்கள், ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமே உண்மையை அறிய முடியும். மீண்டும் கடந்தகால சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என இலங்கை அரசு முழுமையாக உணர்ந்துள்ளது.
 
இதற்காக தென் ஆப்பிரிக்கா மற்றும் பிறநாடுகளின் நிர்வாக உதவியுடன் ஒரு உண்மையான கமிஷன் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. அந்த கமிஷன் அளிக்கும் பரிந்துரைகளை செயல்படுத்த ஒரு அலுவலகமும் அமைக்கப்பட உள்ளது.
 
அது போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க சிறந்த வழி அரசியல் தீர்வு தான். அதற்காக புதிய சட்டம் இயக்க முடிவு செய்துள்ளோம். அச்சட்டம் பாராளுமன்றத்தில் விரைவில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். இது தமிழர்களின் குறைகளை தீர்க்க உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
 
கூட்டத்தில் அவருடன் நீதி துறை மந்திரி விஜேதாசா ராஜபக்சே, கிழக்கு மாகாண கவர்னர் ஆர்டின் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment