Tuesday, September 15, 2015

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பது குறித்து பேச்சு: இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி!

Tuesday, September 15, 2015
நியூயார்க்: 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைக்க வேண்டும்; பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' என, இந்தியா தரப்பில் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இடம்பெறவும் இந்தியா முயற்சித்து வருகிறது.

ஆனால், நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் உள்ள ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்தியாவின் முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தன. மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு கூட, இந்த நாடுகள் சம்மதிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு, தற்போது, குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பது குறித்து பேச்சு நடத்துவதற்கு, ஐ.நா., தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை, ஐ.நா., பொதுச்சபை நேற்று ஏற்றுக்கொண்டது.

No comments:

Post a Comment