Tuesday, September 22, 2015

ஸ்டாலினின் புது 'லுக்'கு: கட்சிக்கு அடிக்குமா 'லக்'கு!

Tuesday, September 22, 2015
மதுரை: 'பேச்சில் புதுப்பாணி; உடையில் புது லுக்; பாடி லாங்வேஜ்ஜில் புது டெக்னிக்' என்று கலக்கும் திமுக பொருளாளர் ஸ்டாலினின் 'ஸ்டைல்', திமுகவுக்கு ஓட்டுகளைப் பெற்றுத் தருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இமேஜ் பில்ட் அப்: தற்கால அரசியலுக்கு 'இமேஜ் பில்ட் அப்' அவசியமாகி வருகிறது போலிருக்கிறது. ஏற்கனவே பிரதமர் ஆவதற்கு முன்பு, இமேஜை மேம்படுத்துவது பற்றிய படிப்பை அமெரிக்காவில் மோடி படித்து வந்துள்ளார் என்று கூறப்பட்டது. அவர் அணியும் உடைக்கும், பேசும்போது கையை முகத்தை அசைத்து அசைத்து, பேச்சுக்கு ஒரு கவர்ச்சியையும் கொடுக்கிறார் என்று கூறுவோரும் உண்டு.

ஸ்டாலின் முயற்சி:
 
மேடைப் பேச்சையும், அடுக்கு மொழி தமிழையும் மட்டுமே நம்பி இருந்த திராவிட கட்சியினர், எப்போதுமே வௌ்ளை சட்டை, வேஷ்டியில் வலம் வருவதே வழக்கம்.அவர்களும் காலத்திற்கேற்ப தங்கள் பாணியை மாற்றிக்கொள்ள முனைந்திருப்பதாக தெரிகிறது. இதற்கு உதாரணம் தான் ஸ்டாலினின் நவீன 'லுக்'.தற்போது அவர் துவக்கி உள்ள கட்சியின் 'நமக்கு நாமே' திட்டத்தில், இது அப்பட்டமாக தெரிகிறது. வௌ்ளை சட்டை, வேஷ்டியை 'கடாசிவிட்ட' அவர், வண்ண உடைக்கு மாறி உள்ளார். முழுக்கை சட்டையை மடக்கிவிட்டபடி, கலர் பேன்டுக்குள் 'இன்சர்ட்' செய்து, இளைஞராக காட்சி தருகிறார். இதை உன்னிப்பாக கவனித்து வரும் மதுரையை சேர்ந்த திமுக முன்னாள் இலக்கிய அணி தலைவர் ஒருவர், ''கட்சிக்குள் இளைஞர்களை இழுத்துவரும் முயற்சியாக இதை நாம் பார்க்க வேண்டும்.

இக்கால இளைஞர்கள், திராவிட கட்சிகளை புறக்கணிக்கிறார்களோ என்ற சந்தேகம் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இருக்கிறது. இதனாலேயே நவீன பாணியில் காட்சி அளிக்கும் ஸ்டாலின், இளைஞர்களை கவரப் பார்க்கிறார். ஏனெனில் திராவிட பாரம்பரியத்தில் ஊறிய எல்லோருக்கும் இப்போது வயதாகிவிட்டது. இனிமேல் இளைஞர்களை கொண்டு வந்தால் தான், கட்சியை தொடர்ந்து நடத்த முடியும் என ஸ்டாலின் கருதுகிறார்'' என்றார்.இன்னொரு காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ''மேடைப் பேச்சிலும் ஸ்டாலின் நிறைய மாற்றத்தை காண்பிக்கிறார். கையை அதிகமாக ஆட்டியபடி, பொதுமக்களை நோக்கி கேள்விகளை எழுப்பியபடி, அடிக்கடி மார்பை தொட்டுக்காண்பித்து பேசுகிறார்.

 இதுவும் சமீபத்திய மாற்றம் தான். ஏதோ ஒரு தொழில் ரீதியான இமேஜ் மேம்பாட்டு நிறுவனத்தாரை இவர்கள் வாடகைக்கு அமர்த்தி உள்ளனர். அவர்களின் ஆலோசனையில்படி தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என நினைக்கிறேன்'' என்றார்.இந்த மாற்றங்கள், திமுகவுக்கு இளைஞர்களை அழைத்து வருமா; ஓட்டுகளைப் பெற்றுத் தருமா என்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment