Sunday, September 13, 2015

இந்­திய மீன­வர்கள் விடு­தலை தொடர்­பாக தமிழக அரசுடன் பேச்சுக்கு இடமில்லை, மத்திய அரசுடனேயே பேசுவோம் : மஹிந்த அம­ர­வீர!

Sunday, September 13, 2015
இந்­திய மீன­வர்கள் விடு­தலை தொடர்­பாக தமிழ் நாட்டு அர­சுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்­சுக்கு இட­மில்லை. அது அவ­சி­யமும் இல்லை என்று கடற்­றொழில் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரிவித்தார். இந்­திய மத்­திய அர­சு­ட­னான ராஜ­தந்­திர நட்­பு­ற­வுக்­க­மைய திங்­கட்­கி­ழமை இந்­திய மீன­வர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­வர் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.
 
இது தொடர்­பாக மஹிந்த அம­ர­வீர மேலும் கருத்து தெரி­விக்­கையில், இந்­திய மீன­வர்கள் எமது கடற் பரப்பில் அத்­து­மீறி நுழைந்து மீன் பிடிக்கும் போதே கைது செய்­ய­ப­டு­கின்­றனர். எனவே, சர்­வ­தேச கடல் எல்­லைகள் தொடர்­பான சட்­டங்­க­ளுக்­க­மைய இது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். இவ்­வாறு கடல் எல்லை மீறப்­ப­டு­வ­தற்கு எதி­ராக ரூபா 15 இலட்சம் தண்­ட­ப்ப­ண­மாக அற­விட முடியும். சட்­டத்தின் முன்­நி­றுத்தி இந்த தண்டப் பணம் அற­விட முடி­வ­தோடு வேறு தண்­ட­னை­களும் வழங்க முடியும்.
 
எமது நாட்டு மீன­வர்கள் கடல் எல்­லை­களை தாண்­டினால் இவ்­வா­றான தண்டப் பணத்தை செலுத்­தியே மீட்­கப்­ப­டு­கின்­றனர். ஆனால் இந்­திய மீன­வர்கள் எமது கடல் எல்­லைக்குள் அத்­து­மீறி மீன் பிடிக்கும் போது கைது செய்­யப்­ப­டு­கின்­றனர். அதன் போது இந்­திய மத்­திய அர­சு­ட­னான எமது நாட்­டி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் ராஜ­தந்­திர நட்­பு­றவு அடிப்­ப­டையில் இந்­திய மீன­வர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர். இந்­திய மீன­வர்கள் பிரச்­சி­னையை தீர்ப்­பதில் இலங்­கை­யி­லுள்ள இந்­திய உயர்ஸ்­தா­னிகர் மற்றும் உதவி தூது­வர்கள் எம்­மோடு சுமு­க­மான பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­கின்­றனர். அத்­தோடு விட்டுக் கொடுக்கும் மனப்­பான்­மை­யு­டனும் நட்­பு­ற­வு­டனும் நடந்து கொள்­கின்­றனர்.
 
அத்­தோடு இலங்கை அரசும் இந்­திய மத்­திய அரசும் ராஜ­தந்­திர ரீதி­யான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­கிறார். இதன்­போது இந்­திய மீன­வர்கள் பிரச்­சினை தொடர்­பாக பேச்சு வார்த்­தைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.இதற்­க­மைய எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட இந்­திய மீன­வர்கள் அனை­வரும் விடு­தலை செய்­யப்­ப­ட­வுள்­ளனர். ஆனால் கைப்­பற்­றப்­பட்ட பட­குகள், வலைகள் எதுவும் மீளக் கைய­ளிக்­கப்­பட மாட்­டாது. அவ்­வாறு அனைத்­தையும் கைய­ளித்து மீன­வர்­களும் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்­க­ளானால் மீண்டும் மீண்டும் இந்­திய மீன­வர்கள் எமது கடல் எல்­லைக்கு வரு­வார்கள்.
 
இப்­பி­ரச்­சினை தொடர்­பாக தமிழ் நாட்டு அர­சு­டனோ அல்­லது அர­சியல் கட்­சி­க­ளு­டனோ பேச்­சு­வார்த்தை நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை.தமிழ் நாட்டில் எனக்கெதிராக ஆர்பாட்டங்கள் நடைபெற்றால் அதற்கு அஞ்சப் போவதும் இல்லை. தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சப் போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment