Saturday, September 5, 2015

தேசிய ஐக்கிய அரசின் அமைச்சரவை நேற்று பதவியேற்றது!

Saturday, September 05, 2015
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமயிலான முதலாவது தேசிய ஐக்கிய அரசின் அமைச்சரவை நேற்று பதவியேற்றது.

நாடாளுமன்ற தர்தலில் அதிக இடங்களைப் பிடித்த ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும், அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சியும் இணைந்த தேசிய ஐக்கிய அரசை அமைத்துள்ளன. பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றிருந்த நிலையில் நேற்று இரு கட்சிகளையும் சேர்ந்த 43 பேர் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மேலும் 5 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தெரிகிறது.நேற்று பதவியேற்ற 43 பேரில் 11 பேர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்; எரிந்து கொண்டிருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசினார். இலங்கையில் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரான சம்பந்தன் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
அமைச்சர்கள் விபரம்

01. ரணில் விக்ரமசிங்க - தேசிய கொள்கை மற்றும் பொருளாதாரா அலுவல்கள்

02. ஜோன் அமரதுங்க - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார

03. காமினி ஜயவிக்கிரம பெரேரா - வலுவாதார அபிவிருத்தி வன ஜீவராசிகள்

04. நிமல் சிறிபால டி சில்வா - போக்குவரத்து

05. எஸ்பி.திஸாநாயக்க - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி

06. லக்ஸ்மன் கிரியெல்ல - பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்

07. அநுர பிரியதர்ஷன யாப்பா - அனர்த்த முகாமைத்துவம்

08. சுசில் பிரேமஜயந்த - தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு


09. திலக் மாரப்பன  -  சட்டமும்  ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு

10. ராஜித்த சேனாரத்ன  -   சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய துறை

11. ரவி கருணாநாயக்க - நிதி

12. மஹிந்த சமரசிங்க - தொழில்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி


13. மஹிந்த அமரவீர - கடற்தொழில் மற்றும் நீரியில் வளம்

14. துமிந்த திஸாநாயக்க – கமத்தொழில்


15. விஜயதாஸ ராஜபக்ச – புத்தசாசனம்


16. ரஞ்சித் மத்தும பண்டார – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவம்


17. கயந்த கருணாதிலக – நாடாளுமன்றம் புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகம்


18. சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை


19. அர்ஜூன ரணதுங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை

20. என்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன – காணி

21. பி.திகாம்பரம் - மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி

22. சந்திராணி பண்டார  - மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி

23. தலதா அத்துக்கோரல – வெளிநாட்டு வேலைவாய்ப்பு

24. டி.எம்.சுவாமிநாதன் - புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து மத அலுவல்கள்

25. சந்திம வீரக்கொடி - பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு

26. தயாசிறி ஜயசேகர - விளையாட்டு

27. சாகல கஜேந்திர ரத்நாயக்க -  தெற்கு அபிவிருத்தி

28. ஹரின் பெர்னாண்டோ -  தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு

29. மனோ கணேசன் - தேசிய கலந்துரையாடல்கள்

30. தயா கமகே - ஆரம்ப கைத்தொழில்

31. ரிசாட் பதியூதீன் - கைத்தொழில் மற்றும் வாணிபம்

32. கபீர்  ஹாசிம் - அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி

33. வஜிர அபேவர்தன - உள்நாட்டலுவல்கள்

34. ரவூப் ஹக்கீம் - நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள்

35. அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் - தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகாரம்

36. எஸ்.பி.நாவின்ன - உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி கலாச்சாரம்

37. பாட்டலி சம்பிக்க ரணவக்க - மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி

38. நவீன் திஸாநாயக்க - பெருந்தோட்டக் கைத்தொழில்

39. ரஞ்சித் சியம்பலாபிட்டிய - மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி

40. பி.ஹரிசன் - கிராமிய பொருளாதார அபிவிருத்தி

41. அகிலவிராஜ் காரியவசம் - கல்வி

42. டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன - தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்

No comments:

Post a Comment