Monday, August 17, 2015

பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டடத்தில் மிகவும் மும்முரமாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றுவருகின்றன!

 Monday, August 17, 2015
பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டடத்தில் மிகவும் மும்முரமாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நூறு வீதம் தமிழ் வாக்காளர்களைக்கொண்ட பட்டிருப்பு தொகுதியில் இன்று காலை 7.00மணி தொடக்கம் வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

பட்டிருப்பு தொகுதியின் களுவாஞ்சிகுடி மற்றும் போரதீவுப்பற்று,பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை சுமுகமாக நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு,கல்குடா மற்றும் பட்டிருப்பு தொகுதியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான 414 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாவில் 115 நிலையங்களும்,    மட்டக்களப்பில் 199 நிலையங்களும், பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களுக்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்களில்  368 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும், கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும், பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேருமாக மொத்தம் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment