Saturday, August 15, 2015

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏழு தலைவர்களும் பிரதமர் பதவியை ஏற்றுகொள்ள தயாராக இல்லை: மஹிந்தவே அடுத்த பிரதமர்: கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்!

Saturday, August 15, 2015
ஜனாதிபதியினால் அடுத்த பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏழு தலைவர்களும் பிரதமர் பதவியை ஏற்றுகொள்ள தயாராக இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியளலார் சந்திப்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டுள்ளார்.
நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவே நியமிக்கப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச்செயலாளர்கள் பதவிநீக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி பொய் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெறவுள்ள வெற்றியை தடுக்க சிலரின் அழுத்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இதுவென சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
 
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி யாப்பின்படி கட்சி பதவியில் இருந்து யாரையேனும் நீக்க வேண்டுமாயின் மத்திய செயற்குழுவின் அனுமதி பெற வேண்டும். மத்திய செயற்குழுவிற்கு எதிராக நீதிமன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை செய்ய முடியாது. மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் யாரையேனும் பதவி நீக்கம் செய்வதாயின் யாப்பிற்கு அமைய நிறைவேற்று சபையின் அனுமதியில் அதனை செய்ய வேண்டும். நிறைவேற்று சபையை செயலாளர் என்ற அடிப்படையில் நானே கூட்ட வேண்டும். ஆனால் நான் அப்படி எதனையும் செய்யவில்லை என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

No comments:

Post a Comment