Friday, August 14, 2015

இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெற்றதாக வெளியான அறிக்கை பற்றி தெரியாது: ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சார் ஸ்டீபன் டுஜாரிக்!

Friday, August 14, 2015
இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெற்றதாக வெளியான அறிக்கை பற்றி தெரியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சார் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், எல்லா வகையிலான சித்திரவதைகளையும் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னரும் இலங்கையில் தொடர்ச்சியாக சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், காவல்துறையினரும் படையினரும் சித்திரவதைகளை மேற்கொள்ளதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சித்திரவதைகளிலிருந்து விடுதலை என்ற அமைப்பினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. புகலிடம் கோரி நிராகரிக்கப்பட்டு நாடு திரும்பும் நபர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment