Friday, August 14, 2015

நான் உயிருடன் இருக்கும் வரையில் இந்த நாடு இரண்டாக பிளவடைவதற்கு இடமளிக்க மாட்டேன் :முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Friday, August 14, 2015
நாட்டை துண்டாடுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.27000 படை வீரர்கள் உயிரைத் தியாகம் செய்து மிகுந்த அர்ப்பணிப்புடன் பாதுகாக்கப்பட்ட நாட்டை பிளவடைய அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கையை கட்டியெழுக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி ஸ்தம்பிதம் அடைந்த காரணத்தினால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் சரிவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கல் உடைக்கும் கூலித் தொழிலாளி முதல் உயர் பதவி வகிக்கும் பொறியியலாளர்கள் வரையில் பதினைந்து லட்சம் பேர் தொழில்களை இழந்து திண்டாடி வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம், அரசாங்க நிறுவங்களையும் அரச ஊழியர்களையும் இல்லாமல் செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்..
 
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி முதல் கடந்த எட்டு மாதங்களாக தமக்கு சமூக ஊடகங்களில் ஆதரவளித்து வரும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வரும் தேசத்தை நேசிக்கும், என்னை நேசிக்கும் இளைஞர் சமூகத்தினருக்கு எனது நன்றிகளை தலைசாய்த்து தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எமக்கு வாழ ஓர் நாடு வேண்டும் என்பதற்காவே நீங்கள் இவ்வாறு சிரமப்படுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் உயிருடன் இருக்கும் வரையில் இந்த நாடு இரண்டாக பிளவடைவதற்கு இடமளிக்க மாட்டேன். சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ நாம் அனைவரும் ஒரே கொடியின் கீழ் வாழ வேண்டும். எதிர்வரும் 17ம் திகதி எங்களது அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் தாய்நாடு பாதுகாப்பானதாக மாறிவிடும். உங்களுக்கு சேவையாற்ற நான் கடமைபட்டுள்ளேன்.

முன்னர் இருந்ததனை விடவும் நாட்டுக்கு அதிகளவில் சேவையாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டை கருத்திற் கொண்டு செயற்பட முடியாத அரசாங்கத்தினால் நாடு பலவீனமடைந்து செல்கின்றது. பயங்கரவாதம் இல்லதொழிக்கப்பட்ட இலங்கையை பலவீனமாக்குவதே சர்வதேச சமூகத்தின் தேவையாகவும் அமைந்துள்ளது.

அவ்வாறு செய்தால் நாட்டுக்கு நாட்டை நேசிக்கும் தலைமுறையொன்று இல்லாமல் போய்விடும்.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலம்பெயர் சமூகத்தினர் நாடு பற்றி வெளிநாடுகளிலிருந்து கொண்டு நாட்டுக்கு எதிராக பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புலம்பெயர் சமூகம் பணத்தைக் கொண்டு இணைய தளங்களை ஆரம்பித்து பொய்களை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முகநூல் ஊடாக எனக்கு எதிராக போலிப் பிரச்சாரம் செய்து, தோதலில் என்னை தோற்கடித்தார்கள்.

எனினும், தற்போது இளைய தலைமுறையினர் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர்.

டொலர்களுக்கு அடிமையாகாத மெய்யான உணர்வுடன் நாட்டை பாதுகாக்கப் போராடும் இளைஞர் யுவதிகள் சமூக வலைத்தளங்களின் ஊடாக தமக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள விசேட கடிதமொன்றில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment