Saturday, August 15, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்த்தாலும் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கியே தீருவோம்: விமல் வீரவன்ஸ !'':

Saturday, August 15, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்த்தாலும் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கியே தீருவோம்'' என்று தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஐ.ம.சு.மு. ஏற்கனவே இதனைத் தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
மைத்திரிபால சிறிசேன அழுத்தங்களினாலேயே இவ்வாறான ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். தேர்தலின் பின்னர் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து மைத்திரி - மஹிந்த இருவரும் இணைந்து செயற்படுவார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்‌ஷவை ஏகமனதாக ஏற்றுள்ளது. நாங்கள் வெற்றிபெறுவதை ஜனாதிபதி மைத்திரியே ஏற்றுக்கொண்டுள்ளார். ஆகவே, தேர்தலின் பின்னர் மைத்திரி எதிர்த்தாலும் மஹிந்தவே அடுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர். தேர்தல் இறுதித் தருணத்தில் ஏதேனும் தில்லு முல்லு வேலைகளை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது. தாஜுதீன் கொலை தொடர்பில் போலியான ஆவணப்படம் ஒன்றை தயார்செய்துள்ளது'' - என்றார் விமல் வீரவன்ஸ.

No comments:

Post a Comment