Monday, August 17, 2015

நுவரெலியா மாவட்டத்தில் :வாக்குபெட்டிகள்!

Monday, August 17, 2015
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஹலன் மீகஸ்முல்ல தெரிவிக்கின்றார்.

பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 534150 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளில் 423 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அந்தவகையில் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 302836 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கொத்மலை தேர்தல் தொகுதியில் 78068 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா. 82193 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 71053 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 213 வாக்களிப்பு நிலையங்களும் கொத்மலை தேர்தல் தொகுதியில் 73 வாக்களிப்பு நிலையங்களும் வலப்பனை தேர்தல் தொகுதியில் 71 வாக்களிப்பு நிலையங்களும் அத்தோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 14 அரசியல் கட்சிகளிலும் 9 சுயேட்சை குழுக்களிலும் 253 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்கு பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி தேசிய பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டு 51 வாக்குகள் என்னும் நிலையங்களில் வாக்குகள் என்னப்படவுள்ளன. இதில் 9 வாக்குகள் என்னும் நிலையத்தில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தபால் மூல பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 16424 ஆகும்.
நுவரெலியா மாவட்டத்தில் கடைசியாக கொண்டுவரப்படும் வாக்குப் பெட்டி கிரிவன்தெனிய பகுதியில் இருந்தே கொண்டுவரப்படும் இந்த வாக்குப்பெட்டி நுவரெலியா காமினி தேசிய பாடசாலையை வந்தடைவதற்கு இரவு 7.00 மணியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே மிகவும் தூர இடத்தில் இருந்து கொண்டுவரப்படும் வாக்குப் பெட்டியாகும். இந்த வாக்குபெட்டி வந்தடைந்த பின்னரே வாக்குகள் என்னும் வேளைகள் ஆரம்பிக்கப்படும். ஆனாலும் தபால் மூல வாக்குகள் மாலை 4.00 மணிக்கு கணக்கெடுப்பு ஆரம்பமாகும். பொலிஸார் அதிகாரிகள் உட்பட 8500 பேர் இந்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

2010 பொதுத் தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 149111 (56.01வீதம்) வாக்குகளை  பெற்று 5 ஆசனங்களையும் ஜக்கிய தேசிய கட்சி 96885 (36.39வீதம்) வாக்குகளை பெற்று 2 இரண்டு ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. ஆனால் இந்த முறை  நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு ஆசனம் அதிகரிக்கப்பட்டு 7ஆக இருந்த  ஆசனம் 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கு சார்பாக அமையும். சிறுபான்மை மக்களுக்கா?அல்லது பெரும்பான்மை மக்களுக்கா? என்பதை பொருந்திருந்தே பார்க்க வேண்டும்.

இதன்படி  கடந்த முறை ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக ஆறுமுகன் தொண்டமான் 60997 விருப்பு வாக்குகளையும், வேலுசாமி இராதாகிருஸ்ணன் 54083  விருப்பு வாக்குகளையும், பி.இராஜதுரை 49228 விருப்பு வாக்குகளையும், நவீன் திசாநாயக்க 43514 விருப்பு வாக்குகளையும், சீ.பி.ரட்ணாயக்க 41345 விருப்பு வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர்.

அதேவேளை ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் பழனி திகாம்பரம் 39490 விருப்பு வாக்குகளையும், ஜெய ஸ்ரீ ரங்கா 33948 விருப்பு வாக்குகளையும், பெற்று வெற்றி பெற்றனர்.

மொத்தமாக நுவரெலியா மாவட்டத்தில் 5 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஏனைய சிறுபான்மை தமிழர்களான எஸ்.அருள்சாமி 5855 விருப்பு வாக்குகளையும் வடிவேல் புத்திரசிகாமணி
 
2896 விருப்பு வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். அதேபோல ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட எம்.உதயகுமார் 30828 விருப்பு வாக்குகளையும், சுப்பையா சதாசிவம் 24152 விருப்பு வாக்குகளையும், எல்.பாரதிதாசன் 7705 விருப்பு வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். ஆனால் இவர்களால் வெற்றி பெறமுடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

No comments:

Post a Comment