Tuesday, August 18, 2015

யாழ்ப்பாண வாக்கு எண்ணும் நிலையத்தில் நடந்த அதிர்ச்சிச் சம்பவங்கள் என்ன? இதோ தகவல்கள்!

இன்றுகாலையில் வெளியான தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலாமிடத்தில் சிவஞானம் சிறீதரனும், இரண்டாமிடத்தில் தர்மலிங்கம் சித்தார்த்தனும்,
மூன்றாமிடத்தில் மாவை சேனாதிராஜாவும் நான்காமிடத்தில் எம்.ஏ.சுமந்திரனும் அவரைவிட 2000ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஐந்தாமிடத்தில்
அருந்தவபாலனும் இருந்தமை அனைவருக்கும் தெரிந்த விடயமே.
 
ஆயினும் என்ன நடந்ததென்பதே புரியாத புதிராக.. இறுதி முடிவுகள் வெளியாகும் போது இரண்டாவது இடத்தில் இருந்த சித்தார்த்தன் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றார்.
அதேபோல் ஐந்தாவது இடத்தில் இருந்த அருந்தவபாலன் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றார்.
 
இது குறித்து சற்று முன்னர் திரு.அருந்தவபாலனுக்கும், திரு. சரவணபவனுக்கும் இடையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா முன்னிலையில் கடும் வாய்த்தர்க்கம் யாழ் வாக்களிப்பு நிலையத்தில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
 
மிகவும் ஆக்ரோசமாக திரு அருந்தவபாலன் உரையாடுகின்ற அதேவேளை, திரு. சித்தார்த்தன் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றார்.

No comments:

Post a Comment