Thursday, August 06, 2015
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக
ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தலைமையிலான அரசாங்கம் பாதுகாத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லசந்த கொலையாளி தொடர்பில் இந்த அரசாங்கம் விசாரணை நடத்தாமல் இருப்பதற்கான காரணம், கொலையாளி அரசாங்கத்தில் இருப்பதனாலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
லந்தவை இவர்தான் கொன்றார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்துவதாகவும், அவ்வாறு என்றால் விசாரணை நடத்த முடியும் தானே என அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் விசாரணை நடத்தப்படவில்லை அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சந்தேக நபர்கள் அல்லது தொடர்புடையவர்கள் இந்த அரசாங்கத்தில் இருப்பதன் காரணமாகவா விசாரணை நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உண்மையாகவே சந்தேகம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலும் இதேவிதமான சந்தேகம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் விசாரணை நடத்தப்படவில்லை, ஏன் விசாரணைகள் கிடப்பில் போடப்படுகின்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமது ஆட்சிக் காலத்தில் காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளை தாம் காப்பாற்றியமை ஓர் பிழையான செயற்பாடேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் புதல்வி துலாஞ்சலி பிரேமதாச கள்ள நோட்டு அச்சடித்து அவற்றை மாற்றச் சென்ற போது கட்டுகளுடன் மாட்டிக் கொண்டதாகவும் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தாது அவர்களை காப்பாற்றியதாகவும் இது தாம் செய்த பிழையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளுக்கு நாம் அடிமையாகவே செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment