Thursday, August 6, 2015

காவல்துறையினரை தாக்கிய கடற்படை அதிகாரி கைது!

Thursday, August 06, 2015
மஹரகமவில் போக்குவரத்து காவற்துறை அதிகாரி ஒருவரை தாக்க முயற்சித்தமை தொடர்பில் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த காவற்துறை அதிகாரி மீது குறித்த கடற்படை அதிகாரியும் மற்றுமொரு நபரும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

போக்குவரத்து ஒழுங்குவிதியை மீறி அவர்கள் உந்துருளியை செலுத்திய போது, குறித்த காவற்துறை அதிகாரியால் எச்சரிக்கப்பட்டதை அடுத்தே இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
 
கொட்டாஞ்சேனை - ஜம்பட்டா வீதியில் நேற்று இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில்   இருவர் கைது!
 
கொட்டாஞ்சேனை - ஜம்பட்டா வீதியில் நேற்று இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

கைதான இரண்டு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பகையின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடபுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment