Monday, August 17, 2015

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் குறுந்தகவல்களினூடாக தேர்தல்கள் ஆணையாளருக்கு 50 முறைப்பாடுகள்!

Monday, August 17, 2015
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் குறுந்தகவல்களினூடாக தேர்தல்கள் ஆணையாளருக்கு 50 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு மாத்திரம் 36 முறைப்பாடுகள் கிடைத்ததாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

சட்டவிரோதமாக தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்கள் காட்சிப் படுத்தியுள்ளமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே பொதுத் தேர்தல் குறித்து 1,572 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அவ்வாறன முறைப்பாடுகளில் 322 முறைப்பாடுகள் சட்டவிரோதமாக தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்கள் காட்சிப் படுத்தியுள்ளமை தொடர்பில் பதிவாகியுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் 356 முறைப்பாடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 105 முறைப்பாடுகளும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 72 முறைப்பாடுகளும், குருநாகல் மாவட்டத்தில் 96 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
மேலும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 808 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 13 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டகளைக் கைதுசெய்வதற்கான 278 சுற்றிவளைப்புகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சுற்றிவளைப்புகள் மூலம் 642 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment