Friday, August 7, 2015

கந்தளாயில் 14,000 இற்கும் மேற்பட்ட போலி வாக்குச்சீட்டுக்கள் பிடிபட்டன!!

Friday, August 07, 2015
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்குச்சீட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரம் சந்திப்பகுதியில் உள்ள கடை ஒன்றிலிருந்து இந்தப்போலி வாக்குச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுத்தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டத்திற்கு உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டை போன்று இந்த வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு 14 ஆயிரத்து 986 போலி வாக்குச்சீட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இந்தக் கடையை வாடகைக்கு பெற்றிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் குறித்து கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment