Friday, August 7, 2015

சம்பிக்கவின் பிரச்சார செலவு 1400 லட்சம்: கம்மன்பில!

Friday, August 07, 2015
எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைச்சர் சம்பிக்க ரணவக்க 1400 லட்ச ரூபா செலவிடுவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
     

ஐக்கிய தேசிய முன்னணியில் தேர்தலில் போட்டியிடும் சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகியனவற்றில் அதிகளவு பிரச்சார செலவைச் செய்யும் வேட்பாளராக திகழ்கின்றார்.

உத்தேச பிரச்சார நடவடிக்கைகளுக்கு அமைய 1400 லட்சம் ரூபாவை சம்பிக்க செலவிட உள்ளார்.

நல்லாட்சிக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாகக் கூறும் சம்பிக்க எவ்வாறு இவ்வளவு பணத்தை செலவிடுகின்றார்?

தூய்மையான அரசியல்வாதி என அடையாளப்படுத்திக் கொள்ளும் சம்பிக்க ஓர் வர்த்தகர் அல்ல. அவ்வாறான ஓர் நிலையில் எவ்வாறு இவ்வளவு பெரிய தொகையை தேர்தலுக்காக செலவிடுகின்றார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக இவ்வளவு பெரிய தொகை பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதனை சம்பிக்க நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென, உதய கம்மன்பில கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment