
Sunday, July 26, 2015வாஷிங்டன்:இந்த தகவல்கள் திருடப்பட்டதை அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்களும் ஒப்புக்கொண்டன. எனினும், உளவுத்துறை தொடர்பான தகவல்கள்.., குறிப்பாக, 'சி.ஐ.ஏ.' தொடர்பான தகவல்கள் எதும் திருடப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உளவுத்துறை தொடர்பான தகவல்களையும் சீன ஹேக்கர்கள் கைப்பற்றி இருக்கக்கூடும் என்ற அச்சம் தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, வேறு ஏதாவது போர்வையில் சீனாவில் தங்கி அமெரிக்காவுக்காக உளவு வேலை பார்த்த- பார்த்துவரும் 'சி.ஐ.ஏ.'-வின் கையாட்களான ரகசிய ஏஜெண்ட்களின் கதி என்னவாகுமோ..? என்ற கலக்கம் அமெரிக்க அதிகாரிகளின் வயிற்றில் புளியை கரைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறை இணையதளங்களுக்குள் ஊடுருவிய சீனாவை சேர்ந்த தகவல் திரட்டு
திருடர்கள் (ஹேக்கர்ஸ்), அமெரிக்க அரசின் செயல்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய ரகசிய தகவல்களை சேகரித்துள்ளதாக
சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
No comments:
Post a Comment