Thursday, July 23, 2015

சுதந்திர கூட்டமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்தவாரம்

Thursday, July 23, 2015
விரைவில் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்தவுடன் நேற்று ஜனாதிபதி சந்திப்பு மேற்கொண்ட வேளையில், இந்த இணக்கப்பாட்டை வெளியிட்டதாகவும் அனுர பிரியதர்ஷன யாப்பா எமது செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.

இதன்படி, பெரும்பாலும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் பல உறுப்பினர்கள் இந்த முறை ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் அடுத்து நடைபெறவுள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், தற்போது தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின்உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகுவது தொடர்பிலும், சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் வைத்து தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கட்சித் தலைவரின் அனுமதி இன்றி, சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை நடத்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
           

No comments:

Post a Comment