Wednesday, July 29, 2015

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது!

Wednesday, July 29, 2015
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
அமைச்சர் பிரேமதாச திவிநெகுமு பிரஜைகள் வங்கியின் பணத்தை துஸ்பிரயோகம் செய்ததாக சஜித் பிரேமதாசவிற்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி விவசாய ஆய்வு உதவி அதிகாரிகளின் சங்கத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
அமைச்சருக்கு எதிரான முறைப்பாடு குறித்து துரித கதியில் விசாரணை நடத்த வேண்டுமென நிதிக் குற்றவில் விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
இந்த மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

No comments:

Post a Comment