Wednesday, July 29, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைகளை கவனத்தில் கொண்டு சோபித தேரர் - ரணில் உடன்படிக்கை: குணதாச அமரசேகர!

Wednesday, July 29, 2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தால், அது தொடர்பாக இனவிரோத முத்திரை குத்தப்படுவது வழமையான நிகழ்வு என தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவரும் தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
 
இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைகளையும் கவனத்தில் கொண்டு சோபித தேரர் – ரணில் விக்ரமசிங்க உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளதாகவும் சம்பிக்க, ரத்ன தேரர் ஆகியோர் இதற்கு வெள்ளை சுண்ணாம்பு பூசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய, தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் உறுப்பினர் பொங்கமுவே நாலக தேரர், சம்பிக்க ரணவக்க நாடாளுமன்ற பதவியுடன் திருப்தியடையும் நபர் அல்ல.
 
சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிக்கு மோப்பம் பிடித்து வருகிறார். ஆனால், எந்த கட்சியாக இருந்தாலும் ரத்ன தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி போதுமானது என்றார்.

No comments:

Post a Comment