Wednesday, July 22, 2015

சிரியாவில் அமெரிக்க தாக்குதலில் அல்-கொய்தா மூத்த தலைவர் பலி!

Wednesday, July 22, 2015
வாஷிங்டன்:சிரியாவில் அமெரிக்க நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் முஹ்சின் அல் பத்லி பலியாகினார்.
 
அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர், முஹ்சின் அல் பத்லி. குவைத்தில் பிறந்த இவர், அல்கொய்தா இயக்கத்தின் கொரசான் குழுவின் தலைவர் ஆவார். இவர் கடந்த 8-ந் தேதி, சிரியாவில் சர்மடா என்ற இடத்துக்கு அருகே ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அமெரிக்கா நடத்திய வான்தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்த தகவலை அமெரிக்கா இப்போதுதான் வெளியிட்டுள்ளது.
 
இவரது தலைக்கு அமெரிக்கா 7 மில்லியன் டாலர் (சுமார் ரூ.44 கோடியே 80 லட்சம்) விலை வைத்திருந்தது. 
 
முஹ்சின் கொல்லப்பட்டிருப்பது குறித்து பென்டகன் ராணுவ தலைமையகத்தின் செய்தி தொடர்பாளர் ஜெப் டேவிஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள், கூட்டாளி நாடுகளுக்கு எதிரான அல் கொய்தா இயக்கத்தின் செயல்பாடுகளில் முஹ்சின் கொல்லப்பட்டிருப்பது பாதிப்பை ஏற்படுத்தும்’ என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும் கடந்த 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந் தேதி தாக்குதல் நடத்தப்போவது குறித்து அல்கொய்தா தலைமை, முன்கூட்டியே தகவல் சொன்ன முக்கிய பிரமுகர்களில் இவரும் ஒருவர் என ஜெப் டேவிஸ் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment