Friday, July 24, 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் மூன்று வேர்ப்பாளர்கள்!

Friday, July 24, 2015
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் மூன்று வேர்ப்பாளர்களுக்கும் ஊரார் அனைவரும் அணி திரண்டு வாக்களிப்பது என அக்கரைபற்றின் அனைத்து பள்ளிகள், அனைத்து விளையாட்டு கழகங்கள் ,வர்த்தக சங்கம் ,மர ஆலைகள் சங்கம் , ஆட்டோ சங்கம் ,இன்னும் பல பொது நிறுவனங்கள் மற்றும் இன்னும் பல பொது அமைப்புக்கள் கூடி ஒருமித்த குரலில் பொது பிரகடனம் ஒன்றை நேற்று அக்கரைபற்று அதாஉல்லா அரங்கில் நிறைவேற்றி உள்ளது .
 
இதன் மூலம் அக்கரைப்பற்றில் காணப்படும் 28000 ஆயிரம் வாக்குகளில் கிட்டத்தட்ட 25000 வாக்குகள் தேசிய காங்கிரசிக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது . கடந்த 15 ஆண்டுகளாக நடை பெற்ற தேர்தல்களில் அக்கரைபற்றில் இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் பிரகாரம் தேசிய காங்கிரசையும் அதன் தலைமையையும் பலப்படுத்தி வந்துள்ளமை குறுப்பிட தக்கது .
 
சுமார் 15 ஆண்டுகளாக கட்டிகாத்த எமது பிரதிநிதித்துவத்தை ஒருபோதும் இழக்க அனுமதியோம் என்ற கோசமும் இதன்போது ஓங்கி ஒலித்தது.

No comments:

Post a Comment