Friday, July 24, 2015

பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானத்தைஎந்த அரசுக்கும் விற்கவில்லை: சீனாவின் டி.ஜே.ஐ., நிறுவனம்!

Friday, July 24, 2015
பீஜிங்: பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானத்தை, எந்த நாட்டிற்கும் நேரடியாக விற்பனை செய்யவில்லை' என, அதை தயாரித்த, சீனாவின் டி.ஜே.ஐ., நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 15ம் தேதி, பாகிஸ்தான் எல்லையில், ஆளில்லா உளவு விமானம் ஒன்றை, அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.இந்த உளவு விமானத்தை இந்தியா அனுப்பியதாக, பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துாதர் டி.சி.ஏ., ராகவனை, பாகிஸ்தான் அரசு அழைத்து, தன் கண்டனத்தை தெரிவித்தது.

ஆனால், பாகிஸ்தான் குற்றச்சாட்டை மறுத்த, மத்திய வெளியுறவு செயலர் ஜெய்சங்கர், ''சீன தயாரிப்பு போல் காணப்படும் இந்த வகை உளவு விமானம், இந்திய ராணுவத்திடம் இல்லை,'' என்று தெரிவித்திருந்தார்.அவரது கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில், அந்த விமானத்தை, சீனாவின் டி.ஜே.ஐ., நிறுவனம் தயாரித்துள்ளதாக, சீன அரசின், 'பீப்பிள்ஸ் டெய்லி ஆன்லைன்' செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், 'எந்தவொரு நாட்டிற்கும், ஆளில்லா உளவு விமானத்தை நேரடியாக விற்பனை செய்வதில்லை' என்று டி.ஜே.ஐ., தெரிவித்துள்ளது.

எந்த அரசும் அதன் நேரடி வாடிக்கையாளர் அல்ல என்றும், அதே சமயம், தன் வலைதளம் அல்லது முகவர்கள் மூலம், யார் வேண்டுமென்றாலும், ஆளில்லா உளவு விமானங்களை சுலபமாக வாங்கலாம் என்றும் டி.ஜே.ஐ., கூறியுள்ளது.இந்த விளக்கம், உளவு விமானம் தொடர்பாக, இது நாள் வரை இந்தியாவை குற்றம்சாட்டி வந்த பாகிஸ்தானுக்கு, பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment