Tuesday, July 07, 2015
புலிகள் தீவிரவாத அமைப்பை மீளஉருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்லிப்பழையை சேர்ந்த சக்திவேல் ராஜ்குமாரன் (வயது -41) என்பவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விடுக்கப்பட்ட கட்டளையைத் தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் முன்னர் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலை பெற்றவர் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன் அவரது வீட்டில் இருந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரைபடங்கள், புகைப்படங்கள் என்பவற்றுடன் வங்கிக் கணக்குப் புத்தகங்ளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment