Saturday, July 11, 2015

மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் போட்டி!

Saturday, July 11, 2015      
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவில்லை என்பதற்காக ஹம்பாந்தோட்டை மக்களுக்கு எந்தவித அநியாயங்களும் இடம்பெறமாட்டாதென்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐ.ம.சு.கூ சார்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவில் கைச்சாத்திட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
ஹம்பாந்தோட்டை மக்களுக்காக தான் போட்டியிடுவதாகவும், மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
------
 
ஜனாதிபதியாக பணியாற்றிய பின்னர்  விளாடிமிர் புட்டினால் ரஸ்ய பிரதமராக முடியுமானால் ஏன் மகிந்த ராஜபக்ச அவ்வாறு பிரதமராக கூடாது என மேல்மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில கேள்விஎழுப்பியுள்ளார்.

இந்து நாளிதழிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் வல்லரசு ஒன்று அனுபவித்ததை ஏன் சிறிய நாடொன்று அனுபவிக்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச அதிகாரவெறிபிடித்தவர் அல்ல என குறிப்பிட்டுள்ள அவர் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு அமைதியான முறையில் அதிகாரத்தை ஓப்படைத்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை ஐக்கியப்படுத்த கூடிய ஒரே தலைவர் ராஜபக்ச இதன் காரணமாகவே அவரை தேர்தலில் போட்டியிடுமாறு அழைத்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment