Saturday, July 25, 2015

கடந்த 3 ஆண்டுகளில் 20 இந்திய போர் விமானங்கள் விபத்து: ரூ.386 கோடி இழப்பு!!

Saturday, July 25, 2015
புதுடெல்லி:கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 20 பைட்டர் போர் விமானங்கள் விபத்தில் சிக்கியிருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்திற்கான முக்கிய காரணங்களாக விமானிகளின் தவறு மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த விமான விபத்துக்களால் மத்திய அரசுக்கு ரூ.386 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் விபத்தில் சிக்கிய இந்திய போர் விமானங்களின் விபரம் பின்வருமாறு:-

(2012-13) ஒரு சுகோய் விமானம், ஒரு ஜாக்குவார் மற்றும் 3 எம்.ஐ.ஜி ரக போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது.

(2013-14) ஒரு ஜாக்குவார் மற்றும் 5 எம்.ஐ.ஜி. ரக போர் விமானங்கள் உள்பட 6 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

2014-2015ல் அதிக விபத்துகள் நடத்துள்ளது. இதில் இரண்டு ஜாக்குவார், 4 எம்.ஐ.ஜி ரக போர் விமானங்கள் மற்றும் ஒரு சுகோய் விமானமும் விபத்தில் சிக்கியுள்ளது.

No comments:

Post a Comment