Thursday, July 30, 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சுமார் 14 மில்லியன் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவுறும் நிலையில்!

Thursday, July 30, 2015
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சுமார் 14 மில்லியன் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இன்னும் 2 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த முறை 16 மில்லியன் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன.

இதேநேரம், பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை பகிரும் நடவடிக்கைகள் இன்றையதினம் முதல் ஆரமபிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் வரையில் இந்த பணிகள் இடம்பெறவுள்ளன.

இதற்கிடையில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் எதிர்வரும் தேர்தல் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.

இதில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment