Thursday, June 04, 2015
தமிழக மீனவர்கள் ஐந்து பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழகத்தின் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.
கச்சதீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தலைமன்னாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, அந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
எனினும் கடற்படையினர் இதனை மறுத்துள்ளனர்.
அண்மையில் 14 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மேலதிகமாக யாரையும் கைது செய்யவில்லை என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், கச்சத்தீவு பகுதியில் மூழ்கிய படகொன்றில் இருந்து ஐந்து தமிழக மீனவர்கள், அவர்களுடன் இருந்த சகமீனவர்களாலேயே மீட்கப்பட்டிருந்ததாகவும், தமிழகத்தின் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

No comments:
Post a Comment