Tuesday, June 9, 2015

ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை விமானம் மாயம்!!

Tuesday, June 09, 2015
சென்னை:சென்னை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட, இந்திய கடற்படை விமானம் மாயமாகியுள்ளது.
டோர்னியர் வகையை சேர்ந்த அவ்விமானத்தில் மூன்று விமானிகள் பயணித்துள்ளனர். நேற்றிரவு 10.30 மணியளவில் ரோந்து பணிக்காக கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
 
இதையடுத்து காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் கடலில் விழுந்துள்ளதா அல்லது காணாமல் போனதில் ஏதும் சதித்திட்டம் இருக்குமா என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment