Friday, June 5, 2015

உலகில் மிக வேகமாக வளர்ச்சியடையும் சுற்றுலா நகரங்களுக்கிடையே கொழும்பு நகருக்கு முதலாவது இடம்!

Friday, June 05, 2015
உலகில் மிக வேகமாக வளர்ச்சியடையும் சுற்றுலா நகரங்களுக்கிடையே கொழும்பு நகருக்கு முதலாவது இடம் கிடைக்க பெற்றுள்ளது.

உலகில் வேகமாக வளர்ச்சியடையும் சுற்றுலா நகரம் தொடர்பில் சர்வதேச நிறுவனம் ஒன்று ஆய்வுகளை நடத்தியது.

இந்த ஆய்வுகளுக்கு அமைய இந்த இடம் கொழும்பு நகருக்கு கிடைக்க பெற்றுள்ளது.

கடந்த ஆறு வருட கால தரவுகள் இந்த ஆய்வுகளுக்காக பெற்று கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் வேகமாக வளர்ச்சியடையும் நகரங்களுக்கிடையே இரண்டாவது இடத்தை சீன சிச்சுவான் மாநிலத்தின் ஜெங்;டூ (உhநபெனர)  நகரத்திற்கு கிடைக்க பெற்றது.

மூன்றாவது, நான்காவது இடங்கள் முறையே ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரத்திற்கும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரிற்கும் கிடைக்க பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment