Thursday, June 04, 2015
மிக் ரக விமான கொடுக்கல் வாங்கல்கள்
குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ
விளக்கமளித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும்
மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
பெலிஸிமா ஹோல்டிங் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டமையில் எவ்வித இரகசியமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியில் இந்த கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment