Thursday, June 04, 2015
புதிய பாராளுமன்றம் அரசியல் அமைப்பு பேரவையை நிறுவும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு பேரவையை நிறுவும் அதிகாரம் தற்போதைய நாடாளுமன்றிற்கு கிடையாது.
புதிதாக நிறுவப்படும் நாடாளுமன்றின் ஊடாக அரசியல் அமைப்பு பேரவையை நிறுவ முடியும். அரசியல் அமைப்பு பேரவைக்கு உரிய நபர்களை நியமிக்கும் பொறுப்பினை நாம் புதிய நாடாளுமன்றிடம் ஒப்படைப்போம்.
அரசியல் அமைப்புப் பேரவைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்களே நியமிக்கப்பட வேண்டும். அமைச்சர்கள் நிறைவேற்று அதிகாரத்தின் ஓர் அங்கமாகும் எனவே அமைச்சர்கள் இந்தப் பணிக்கு பொருத்தமுடையவர்கள் அல்ல என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment