Tuesday, May 26, 2015

பெரும்பான்மை பலமுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் அரசாங்கத்தை கையளிக்குமாறு கோரியுள்ளனர்: முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன!

Tuesday, May 26, 2015
பெரும்பான்மை பலமுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் அரசாங்கத்தை கையளிக்குமாறு கோரி முன்னணியின் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமது ஏகமனதான தீர்மானத்தை ஜனாதிபதிக்கு கடித மூலம் அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
 
பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைத்து பிரதமரையும் தெரிவு செய்த பின் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வழிவகை மேற்கொள்ளுமாறும் அவர்கள் ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.
நேற்றைய தினம் கொழும்பு அபயராமவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் தெரி வித்தார்.
 
பிரதமரை நியமிப் பதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி க்குள் எந்தவித சிக்கல்களும் கிடை யாது என்பதையும் நாம் ஜனாதிபதி க்குத் தெரிவித்துள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அரசாங்கத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தயார் என்றால் பிரதமர் யார் என்று அறிவிக்க நாம் தயார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமரே ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிட்ட தினேஸ் குணவர்த்தன, அந்த பிரதமரை விலக்கி விட்டு அரசியமைப்புக்கு மாறாக பலமில்லாத பிரதமர் ஒருவரை எவ்வாறு நியமிக்க முடியும்?என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment