Wednesday, May 20, 2015

புங்குடுதீவு மாணவி படுகொலை ; ஹர்த்தாலால் முடங்கியது!

Wednesday, May 20, 2015
புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் குற்றவாளிகளுக்கு அதிஉச்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வடக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தால் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது. புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் குற்றவாளிகளுக்கு அதிஉச்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வடக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தால் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது.
 
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்த அழைப்பில் வடக்கில் உள்ள அனைத்து தரப்பினரும் தங்கள் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் வடக்கு மாகாணமே சோக மயமாக காட்சியளிக்கின்றது. போக்குவரத்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனத்தை தெரிவிப்பதன் மூலம் சமூக விரோதச் செயல்களை தடுப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பிலும் ஈடுபடவுள்ளனர்.
 
அத்துடன் யாழ். தொழில் நுட்பக் கல்லூரியினர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியினர் , பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் போராட்டத்தை நடாத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
 
மேலும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் வீதிகளில் ரயர்கள் எரிப்புகளும் இடம்பெற்று வருகின்றன. பொலிஸார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
குறித்த மாணவியின் படுகொலையைக் கண்டித்து மக்கள் வீதிகளில் டயர்களை போட்டு எரித்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இதனால் குறித்த பகுதியால் பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment