Tuesday, February 24, 2015

தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு!

Tuesday, February 24, 2015
தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பில் ஈடுபட்டுள்ள சிறிய கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியகட்சியின் வேண்டுகோளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்றுக்கொள்கின்றதென்றால் அது சரணடைகின்றது என்பதே அதன் அர்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மக்கள் சுதந்திரக்கவட்சியை கைவிட நேரலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கம் குறித்து எவ்வாறான முடிவை எடுக்கின்றது என்பதை பார்த்த பின்னரே தாங்கள் தங்களது முடிவை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மற்றுமொரு முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அவ்வாறன ஓரு முடிவை எடுத்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பது அழிக்கப்பட்டு விடும், சுதந்திரக்கட்சிக்கும் அது அரசியல் தற்கொலையாக அமையும் என மேல்மாகணசபை உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை  அமைப்பது நாட்டில் பிரிவினைவாதத்தை பலப்படுத்தும்,13பிளஸிற்கு வழிவகுக்கும்,சர்வதேச அளவில் புலிகள் மீண்டும் எழுச்சிபெறுவதற்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment