Tuesday, January 13, 2015

வட மாகாண ஆளுநராக டாக்டர் ஐ.எம்.இல்யாசை நியமிக்க T.N.A. ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

Tuesday, January 13, 2015      
இலங்கை::ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் டாக்டர் ஐ எம் இல்லியாஸ் வட மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனவினால் நியமிக்க உள்ளதாக தகவல்கள் வேளியாகிவுள்ளன
 
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது வட மாகான மக்களின் வாக்குரிமைக்காக முன்னின்று செயல் பட்டு மக்களை வாக்களிக்க செய்தவர் வட மாகான மக்களுடனும் அரசியல்வாதிகளுடனும் நீண்டகாலமாக மிக நெருங்கிய உறவை வைத்துள்ள இல்லியாஸ் வட மாகான முஸ்லிம்களின் கடந்த கால இடம் பெயர்வின் போது பொறுப்புடன் செயல் பட்டவர் இவ்வாறான ஒருவர் வட மாகான ஆளுநராக நியமிக்கப்பட்டால் வட மாகான மக்களின் அரசியல் அபிலாசைகள் பாதுகாக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக கூட்டணியின் முக்கியதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
டாக்டர் இல்லியாஸ் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13வது திருத்தம் மேற்கொண்ட பின் நடைபெற்ற முதலாவது மாகான சபை தேர்தலில் வடமேல் மாகாணத்தில் போட்டியிட்டு தெரிவான முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது மக்கள் பிரதிநிதி என்ற பெருமைக்குரியவர்
 
மற்றுமின்றி வடக்கில் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலும் முஸ்லிம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக கட்சி தலைமைபீடம் தாடுத்தும் வேட்பு மனு தாக்கல் செய்து யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான பெருமையும் இவரையே சேரும்

No comments:

Post a Comment