Tuesday, January 13, 2015
இலங்கை::ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. புதிய அமைச்சரவையில் 27 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும் 8 பிரதி அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.
இலங்கை::ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. புதிய அமைச்சரவையில் 27 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும் 8 பிரதி அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதார அபிவிருத்தி, திட்ட அமுலாக்கல் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதுடன் வெளிவிவகார அமைச்சராக மங்கள சமவீர நியமிக்கப் பட்டுள்ளார். இதேவேளை கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவ்வாறே, காலி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டனர்.
புதிய அமைச்சரவையில் 5 சிறுபான்மையினர் உள்ளடங்குவதோடு, அதில் மூன்று முஸ்லிம் அமைச்சர்களும் இரு தமிழர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பழனி திகாம்பரம், ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர வீ.இராதாகிருஷ்ணன், பைசர் முஸ்தபா, வேலாயுதம் ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி அமைச்சராக விஜயகலா மகேஷ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
புதிய அமைச்சர்களின் முழு விபரம் வருமாறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
1. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: பொருளாதார அபிவிருத்தி திட்ட அமுலாக்கல்
2. ஜோன் அமரதுங்க: கிறிஸ்தவ விவகார பொது அமைதி
3. ஜோசப் மைக்கல் பெரேரா: உள்விவகாரம்
4. காமினி ஜெயவிக்ரம பெரேரா: உணவு உணவுப் பாதுகாப்பு
5. மங்கள சமரவீர: வெளிவிவகாரம்
6. கரு ஜெயசூரிய: புத்தசாசனம்
7. லக்ஷ்மன் கிரியெல்ல: பெருந்தோட்ட கைத்தொழில்
8. ரவி கருணாநாயக்க: நிதி
9. ரவூப் ஹக்கீம்: நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு
10. பாட்டலி சம்பிக்க ரணவக்க: மின்வலு எரிசக்தி
11. ராஜித சேனாரத்ன : சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம்
12. துமிந்த திஸாநாயக்க: நீர்ப்பாசனம்
13. கபீர்ஹாசிம்: நெடுஞ்சாலைகள் முதலீட்டு ஊக்குவிப்பு
14. எம்.கே.டி.எஸ். குணவர்தன: காணி
15. சஜித் பிரேமதாஸ: வீடமைப்பு மற்றும் சமுர்த்தி
16. விஜேதாஸ ராஜபக்ஷ: நீதி
17. கயந்த கருணாதிலக்க: தகவல் ஊடகத்துறை
18. நவீன் திஸாநாயக்க: சுற்றுலாத்துறை
19. அர்ஜுன ரணதுங்க: துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை
20. றிசாத்பதியுதீன்: கைத்தொழில் மற்றும் வாணிபம்
21. பழனி திகாம்பரம்: பெருந்தோட்ட உட்கட்டமைப்பு
22. டி.எம்.சுவாமிநாதன் : மீள்குடியேற்றம், புனர்வாழ்வு இந்து விவகாரம்
23. அகில விராஜ் காரியவசம்: கல்வி
24. தலதா அத்துகொரல: வெளிநாட்டு வேலைவாய்ப்பு
25. ரஞ்சித் மத்துமபண்டார: உள்நாட்டு போக்குவரத்து
26. பீ.ஹரிசன்: சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி
27. சந்திராணி பண்டார: மகளிர் விவகாரம் இராஜாங்க அமைச்சர்கள்
1. நந்தமித்ர ஏக்கநாயக்க: கலை, கலாசாரம்
2. வீ.ராதாகிருஷ்ணன் : கல்வி
3. பைசர் முஸ்தபா: விமான சேவை
4. பாலித்த ரங்கே பண்டார: மின்சக்தி எரிசக்தி
5. திலிப் வெதஆராய்ச்சி: மீன்பிடி
6. ரோஸி சேனநாயக்க: சிறுவர் விவகாரம்
7. ரஜீவ விஜேசிங்க : உயர்கல்வி
8. ருவன் விஜேவர்தன: பாதுகாப்பு
9. வேலாயுதம்: பெருந்தோட்ட கைத்தொழில்
10. நிரேஷன் பெரேரா: இளைஞர் அலுவல்கள்
பிரதி அமைச்சர்கள்
1. சம்பிக்க பிரேமதாஸ : கைத்தொழில் வாணிபம்
2. ஹர்ஷ டி சில்வா : திட்ட அமுலாக்கல்
3. எரான் விக்ரமரத்ன : நெடுஞ்சாலைகள் முதலீட்டு ஊக்குவிப்பு
4. சுஜீவ சேரசிங்க: நீதி
5. வசந்த சேனாநாயக்க: சுற்றுலா
6. விஜயகலா மகேஷ்வரன்: மகளிர் விவகாரம்
7. அஜித் பீ பெரேரா: வெளிநாட்டு அலுவல்கள்
8. அனோமா கமகே: நீர்ப்பாசனம்

No comments:
Post a Comment