Sunday, January 11, 2015

கிழக்கு மாகாண ஆளுனராக பொத்துவில் SSP மஜீத்?

Sunday, January 11, 2015      
இலங்கை::நாட்டின் புதிய ஜனாதிபதி தனது பதவி ஏற்பை தொடர்ந்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதற்கு அமைவாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.
 
பதவிப்பிரமாணம் செய்த மறு நிமிடத்தில் ஐ.தே.கட்சின் தேசியத்தலைவர் ரணில் விக்கரம சிங்க அவர்களை நாட்டின் பிரதமராக நியமித்திருந்தார்.
 
அந்த வகையில் அம்பாறை கரையோர மாவட்டத்தின் ஐ.தே.கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர் எம். அப்துல் மஜீதை (SSP) கிழக்கு மாகாணத்திற்கான ஆளுனராக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீகொத்தாவிற்கு சமூகம் தருமாறு அழைப்பு விடுக்கப்ட்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் (பொத்துவில் ஸ்ரீகொத்தாவில்) இருந்து தெரிய வருகின்றது.
 
எம். அப்துல் மஜீத் (SSP) பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி அமோக வெற்றி பெருவதற்கு பெரிதும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment