Thursday, January 22, 2015

பிரதம நீதியரசர் இராஜினாமா செய்ய மாட்டார்!

Thursday, January 22, 2015
இலங்கை::பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல் பொய்யானது என, பிரதம நீதியரசரின் பேச்சாளர் சட்டத்தரணி விஜேரத்ன கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
 
நேற்றையதினம் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
 
இது குறித்து அவர் பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
இதற்கு பதிலளித்த சட்டத்தரணி விஜேரத்ன கொடிப்பிலி, இந்தத் தகவல் பொய்யானது என மறுத்ததோடு, பிரதம நீதியரசர் பதவி விலகுவதாகவோ அல்லது பதவி விலகுவது குறித்த கடிதத்தையோ, அறிவிப்பையோ இதுவரை விடுக்கவில்லை என தெரிவித்தார்.

No comments:

Post a Comment