Thursday, January 22, 2015இலங்கை::மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் மற்றும் எம்.பி. சஜின் வாஸ் ஆகியோரின் கடவுச்சீட்டுக்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவின் கடவுச்சீட்டு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜின்வாஸ் குணவர்த்தவின் கடவுச்சீட்டுகளை முடக்கி வைக்குமாறு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளதாக பதில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.
சஜின்வாஸ் குணவர்த்தன மீது லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment