Saturday, January 17, 2015

பொங்கல் பரிசு மற்றும் ஜல்லிக்கட்டு விஷயத்திலும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படிதான் செயல்பட்டதோ: விஜயகாந்த் கேள்வி!

Saturday, January 17, 2015  
சென்னை:தேசியமுற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
ஏழை மக்களுக்காக வழங்கி வந்த பொங்கல் பரிசுப் பொருள்களை இந்த ஆண்டு வழங்காமல் அதிமுக அரசு ஏமாற்றிவிட்டது. அதற்கான காரணத்தையும் இந்த அரசு தெரிவிக்கவில்லை.
 
தமிழக அரசு கடன் பிரச்னையில் சிக்கியுள்ளது என்றும், அரசை நடத்த போதிய நிதி இல்லாமல் தமிழகம் மிகவும் பின் தங்கிய மாநிலமாக உருவாகி உள்ளது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறினர். இதை அரசு ஏற்க மறுத்தது.
 
விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, நெசவுத் தொழில் முடக்கம், மின்வெட்டு என்று பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு பொங்கல் பொருள்களை வழங்காதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
 
$ஜல்லிக்கட்டு: பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்கட்சிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
அதன் பிறகே, கண் துடைப்புக்காக மத்திய அரசை தமிழக அரசு நாடியுள்ளது.
 
ஒரு மாதத்துக்கு முன்பே மத்திய அரசை நாடி, ஜல்லிக்கட்டு மீதான தடை உத்தரவை ரத்து செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
 
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்ற பழமொழிக்கு ஏற்ப செயல்படும் இந்த அரசின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment