Saturday, January 17, 2015
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவிற்கும்
இடையே உள்ள நெருக்கமான உறவே இலங்கையில் போர் முடிவுக்கு வரக் காரணம் என
நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுடன் நடத்திய கலந்துரையாடலிலே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் இவ்வாறு கூறியுள்ளார்.
குடும்ப ஆட்சியே தாங்கள் படுதோல்வி அடைய வழிவகுத்ததா என அவ் ஊடகம் எழுப்பிய கேள்விக்கு நாமல் ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தலைவருக்கு தான் நம்பக் கூடிய ஒருவரை பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க முடியும்.
மேலும் என் தந்தை அரச தலைவர்களுடன் சேர்ந்து கலந்துரையாடிய பின்னரே வலுவான முடிவுகளை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தவேளை, தனது
இல்லத்தில் முக்கிய நபர்களை சந்தித்த தொடர்பாக வெளியாகிய குற்றச்சாட்டையும்
அவர் மறுத்துள்ளார்.
தேர்தல் சமயத்தில் எந்த ஒரு அரசாங்க அதரிகாரிகளும் வருவது சாதாரணமான விடயம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment