Wednesday, January 7, 2015

வாக்கு மோசடி என்பது அர்த்தமற்ற வாதம்: பிரதி ஆணையாளர் முஹம்மத்!

Wednesday, January 07, 2015
இலங்கை::
வாக்கு மோசடி என்பது அர்த்தமற்ற வாதமாகும். நாட்டின் தேர்தல்கள்  மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இல்லையேல் சிறந்த தேர்தல் முடிவினை எதிர்பார்க்க இயலாது என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹமட் குறிப்பிடுகிறார்.
 
வாக்குமோசடிக்கு எந்தவகையிலும் இடமளிக்கப்படாது எனக் குறிப்பிட்டுள்ள வாக்காளர்களால்  இரகசியமாக அளிக்கப்பட்ட வாக்குகள் பாதுகாக்கப்பட்டு உரிய பாதுகாப்போடு வாக்கு எண்ணும் நிலையங்களில் கொண்டுசெல்லப்பட்டு உரிய முறையில் முடிவுகளை வெ ளியிடுவோம் என்றும் குறிப்பிட்டார்.
 
தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கருத்து வெ ளியிடுகையில்,
 
எதிர்வரும் 8 ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலானது 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் 2014 ஆம் ஆண்டு இடாப்பின் பிரகாரம் ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவற்றில் 316 பேர் இடம்பெயர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர்.
 
மேலும் 25 மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு 12,316 வாக்குச் சாவடிகள் நாடளாவிய ரீதியில் நிறுவப்படவுள்ளன. இதற்கமைய அதிகளவிலான வாக்கு சாவடிகள் கொழும்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளன.  இதன்படி கொழும்பில் 1,076 சாவடிகள் கம்பஹாவில் 1,053 உம் நிறுவப்படவுள்ளதுடன் குறைந்தளவிலான வாக்குச் சாவடிகளாக மன்னார் மாவட்டத்தில் 76 உம் கிளிநொச்சி மாவட்டத்தில் 96 உம் நிறுவப்படவுள்ளன.
 
அதே போன்று வாக்குகள் கணக்கிடுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் சுமார் 1419 நிலையங்களில் வாக்குகள் கணக்கிடப்படவுள்ளன. இதற்க மைய கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான வாக்கு கணக்கிடும் நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. மேலும் அதிகளவி லான தபால் மூல வாக்கு கணக்கிடும் நிலையங்கள் குருணாகல் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளன.
 
மேற்படி கொழும்பில் வாக்கு கணக்கிடும் நிலையங்கள் 140 உம், கம்பஹாவில் 133உம், குருணாகலில் 139 உம் நிறுவப்படவுள்ளது. அத்தோடு தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்கள் 40 குருணாகலிலும் 23 கம்பஹாவிலும் 15 கொழும்பிலும் நிறுவப்படவுள்ளன.
 
மேலும் குறைந்தளவிலான வாக்கு கணக் கிடும் நிலையங்கள் வன்னி மாவட்டத்திலேயே நிறுவப்படவுள்ளன. இதன் பிரகாரம் வன்னி மாவட்டத்தில் 6 தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்கள் உள்ளடங்கலாக 28 நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
அதேபோன்று வடக்கில் ஒரு பிரிவான கிளிநொச்சி மாவட்டத்தில் 7 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
இதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்கள் உள்ளடங்கலாக 1419 வாக்கு கணக்கிடும் நிலையங்களில் வாக்கு எண்ணப்படும்.
 
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கின.  சீரற்ற காலநிலை காரணமாக வாக்காளர் அட்டை விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது.
 
எனினும் தற்போது அஞ்சல் திணைக்களத் தினூடாக சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  அதேபோன்று காலநிலையை  அடிப்படையாக கொண்டு ஏதாவது வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்களிக்க வாக்காளர்களி னால் செல்ல முடியாமல் உள்ளது என்று மாவட்ட செயலாளரிட மிருந்து ஆணையாளருக்கு அறிவிக்கப்படின் மாற்று வாக்கு சாவடியை நிறுவ தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் உண்டு.
 
இதற்கமைய அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஆரம்பத்தில் இடம்பெற்ற போதிலும் தற்போது அதன்தொகை குறைவடைந்துள்ளது. இடம் பெயர்ந்து  இருப்பின் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
 
1931 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப் பட்ட சர்வஜன வாக்குரிமை கொண்டு வாக்கு  அளிப்பது அடிப்படை உரிமையில் உள்ளடக் கப்பட்டது.  இந்நிலையில் வாக்களிப்பு நீதியான முறையில் நடத்தப்பட வேண்டும்.
 
இதற்கு மாறாக வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும். மேலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வீண் குழப்பம் ஏற்படுத்தல் உலா வருதல்  மதுபாவனை போன்றன  தடை செய்யப்பட் டுள்ளது.
 
நாடளாவிய ரீதியிலுள்ள 12,316 வாக்களிப்பு நிலையங்களில் நிறுவப்பட்டுள் ளதுடன். வாக்களிப்பு நிலையமொன்றுக்கு  இரண்டு பேரை கொண்ட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். அத்தோடு நடமாடும் பொலிஸ் பாதுகாப்பும் இதன் போது உள்ளடக்கப்படும்.
எனவே  ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்தினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.  மேற்படி 12 ஆயிரம் வாக்குச் சாவடிகளுக்கு இரண்டு வீத 22 ஆயிரம் பேர் வாக்கு சாவடியை பாதுகாப்பதில் மும்முரமாக இருப்பர்.

No comments:

Post a Comment