Saturday, January 10, 2015

நான் தோல்வியாகக் கருதவில்லை பெருமளவு மக்கள் என்னுடனேயே இருக்கிறார்கள்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Saturday, January 10, 2015
இலங்கை::தோல்வியாகக் கருதவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்ற
சொந்த ஊரான மெதமுலனவிற்கு விஜயம் செய்துள்ளார்.

விசே ஹெலிகொப்டர் மூலம் மஹிந்த ராஜபக்ஸ மெதமுலனவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன் போது பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் கண்ணீருடன் ஜனாதிபதியை வரவேற்றுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, நுவரெலியா, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தோல்வியைத் தழுவியதாகத் தெரிவித்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்தும் தமக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்......

************************************************************************
சில உண்மைகளை சொல்லாமல் இருக்க இயலாது... ராஜபக்ஷே ஆட்சிக்கு பின்னர் தான் இலங்கையில் இவ்வளவு அமைதியாக ஒரு தேர்தல் நடந்துள்ளது... குண்டு சத்தம் இல்லாத ஒரு இலங்கையை காணமுடிகிறது....

முன்னாள் ஜனாதிபதி  ராஜா பக்சே வெறும் 3.63 % வித்தியாசத்தில் தோற்று உள்ளார் . படு தோல்வி இல்லை......

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்ட சாலிகள். அவர்கள் பகுதிக்கான பிரதான அபிவிருத்தி வேலைகள் முடிவடைந்து விட்டன ராஜபக்சே காலத்தில். தரைப் பாதைகள், நீண்ட பாலங்கள், ரயில்வே பாதைகள் எல்லாம் பூர்த்தி அடைந்து விட்டன. இந்தப் பணிகள் வேறு யாராக இருந்தாலும் செய்து முடித்திருக்க மாட்டார்கள்........

தேர்தலில் முறைகேடு செய்வார், ராணுவத்தை பயன்படுத்தி மீண்டும் அதிபராவார் என்றெல்லாம் தமிழக செல்லாகாசுகளின் சத்தத்தையும் மீறி முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷே இதுவரை நடந்த தேர்தல்களிலேயே அமைதியான தேர்தலை நடத்தி மக்களின் முடிவை தலைவணங்கி ஏற்று உடன் அதிபர் மாளிகையும் காலிசெய்துவிட்டார்.

ஆனாலும் அவர் இலங்கைக்கு செய்த நன்மை அளப்பரியது, புலிகளை வேரடி மண்ணோடு அளித்தது மட்டுமின்றி சர்வதேச தடைகள் என்ற சவாலையும் திறன்பட முறியடித்தார். இந்திய  சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன்  அவரின் சிறந்த ராஜ தந்திரமே. தமிழர்களிடமும் நெருங்க முயன்றார். என்ன அவரின் போர் வெற்றிக்குப்பிறகு கிடைத்த அளப்பரிய அதிகாரத்தை சரியாக பயன்படுத்தி உள்ளூர் மக்களுக்கு பெருமளவு நன்மை செய்யதுள்ளதால்  புதிதாக அதிபராகப்போகும் சிரிசேனா ராஜபக்ஷே அளவிற்கு தமிழர்களிடம் நெருங்க முடியாது, காரணம் பெருமளவு புத்த பிட்சுகளின் ஆதரவை பெற்று பெரும் கூட்டணியின் தயவில் ஆட்சியை பிடித்துள்ளார்.

அடிப்படையில் ராஜபக்ஷே ராணுவ உதவியுடன் புலிகளை அழித்த போது அவருடைய அரசிலேயே மந்திரியாக இருந்தவர், தமிழ் கூட்டமைப்பும் வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளதால் இவரை எதிர்த்து அரசியல் செய்யவும் இயலாது. மொத்தத்தில் ஒரு வலுவான அரசை மாற்றி நான்கு பக்கமும் இழுக்கப்படும் ஒரு அரசை இலங்கை மக்கள் அமர்த்தியுள்ளனர், விளைவு சில வருடங்களில் தெரியவரும்....

No comments:

Post a Comment