Monday, January 12, 2015

குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரி சந்திப்பு!

Monday, January 12, 2015
காந்திநகர்::டெல்லியில் வரும் 26-ந் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்கிறார். இதற்காக இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம், காந்திநகரில் நேற்று நடந்த எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டுக்கு இடையே அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஒபாமா வருகை குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக ஜான் கெர்ரி ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் மிகப்பழமையான, மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகள் ஆகும். இவ்விரு நாடுகள் இடையிலான உறவுகள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பு நல்ல விதமாக அமைந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
 
 ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் பிரதமர் மோடியின் முயற்சியை பாராட்டியுள்ளார்!
 
பல நாடுகள் இன்று சூரிய மின்சாரத்தின் பயன்பாடுகளை அறிந்திருக்கின்றன. அவற்றின் விலைமதிப்பில்லா நலன்களை உணர்ந்துள்ளன. அந்த வகையில் பிரதமர் மோடியும் அதை நன்றாகவே செயல்படுத்தி வருகிறார். புதுப்பிக்கதக்க எரிசக்தி உற்பத்தியில் அவர் காட்டும் தீவிர முயற்சிகள் பாராட்டத்தக்கது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சோலார் பல்பை எரியச் செய்வோம் என்ற அவருடைய இலக்கு முக்கியமானது.

 தூய்மையான மின்சார புரட்சியின் பயன்களை அனுபவிக்க இன்றைய உலகத்திற்கு இதுபோன்ற ஒரு 'போல்ட் லீடர்ஷிப்' தேவை. நாம் எல்லோரும் இணைந்தால் பாதுகாப்பான உலகத்தை உருவாக்க முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சோலார் மின்உற்பத்தியில் நாம் அதிகம் முதலீடு செய்ய முன்வந்தால் 2030-க்குள் சோலார் மின்உற்பத்தி மூலம் உலகம் முழுவதும் இன்று நிலவி வரும் மின்பற்றாக்குறையை முற்றிலுமாக போக்க முடியும்.

இவ்வாறு அவர் பாராட்டினார்.

No comments:

Post a Comment