Monday, January 12, 2015

புதிய பாதுகாப்புச் செயலாளராக திரு பி.எம்.யூ.டி. பஸ்நாயக்க பதவயேற்றார்!

Monday, January 12, 2015      
இலங்கை::ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் பீ. எம். யூ. டி பஸ்நாயக்க நேற்று (ஜனவரி 11ம் திகதி) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
சமய வழிபாடுகளைத் தொடர்ந்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய செயலாளர் பஸ்நாயக்க அவர்கள் பாதுகாப்பு அமைச்சுனதும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளின் பிரதானிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
 
தான் நிர்வாக சேவையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எனக்கு அனுபவங்கள் உள்ளது என்றும் முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக தமது கடமைகளை நிறைவேற்றுயதாகவும் புதிய கடமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக சகலரினதும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.
 
அத்துடன் நாட்டில் நிலவும் சமாதானத்தை நிலை நாட்டவும் முப்படையினர் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் உயிரை தியாகம் செய்து பெற்றுத் தந்த இறைமையை பாதுகாக்க தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
 
அரசாங்க நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர் முன்னர் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின் செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் முப்படைகளின் தளபதிகள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதானிகள் கலந்து கொண்டதான பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரிய தெரிவித்தார். 

No comments:

Post a Comment