Thursday, January 29, 2015

நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை கைது செய்தது சரிதான்: ஆஸ்திரேலிய கோர்ட்டு தீர்ப்பு!

Thursday, January 29, 2015
சிட்னி::இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 50 குழந்தைகள் உள்ளிட்ட 157 தமிழர்கள் அகதிகளாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றனர். அவர்கள் சென்ற படகு, ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் பழுதாகி, அவர்கள் தவித்தனர். அவர்கள் பின்னர் ஆஸ்திரேலிய அரசால் கைது செய்யப்பட்டனர்.

அடைக்கலம் கேட்டு ஆஸ்திரேலியாவுக்கு வருவோரை அனுமதிப்பதில்லை என்று அந்த நாட்டு அரசு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருவதே இதற்கு காரணம் ஆகும். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராகவும், கைது செய்ததற்கு நிவாரணம் வழங்கக்கோரியும் ஆஸ்திரேலிய ஐகோர்ட்டில் இலங்கை தமிழர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அடைக்கலம் கேட்டு வந்த தமிழ் அகதிகளை, ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு அப்பால் ஆஸ்திரேலிய அரசு கைது செய்தது சட்டப்படி சரியானதுதான் என தீர்ப்பு அளித்தது. எனவே அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது எனவும் அந்த கோர்ட்டு மறுத்து விட்டது. இலங்கை தமிழர்கள் சார்பில் வழக்கை நடத்திய வக்கீல்கள், இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறினர். இதுபற்றி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இந்த தீர்ப்பு ஏகமனதானது அல்ல. இந்த வழக்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தது” என கூறினர்.

No comments:

Post a Comment